
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முகாமை விட்டுச் சென்றதோ இராணுவம் - மின் கட்டணமோ நிலுவையில்
யாழ்ப்பாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டுச் சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் 4 வருட காலமாக இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த காலப் பகுதிக்கான மின்சாரக் கண்டனத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனவும், நிலுவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தவேளை அந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் அது தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது குறித்த தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)