
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாறவுள்ள வவுனியா மருத்துவமனை - உதயமாகும் மருத்துவபீடம்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை போதனா மருத்துவமனையாக மாற்றப்படும். வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மாங்குளம் ஆதார மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே எனது நோக்கம். இதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)