
posted 30th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவர்களுக்கு பரிசில் வழங்கல்
தன்னாமுனை சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தால் பாடசாலையின் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ரவீந்திரா இக்னேசியஸ் ராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பழைய மாணவர் ஒன்றியச் செயலாளர் மரியதாசன் சூசைதாசன் மற்றும் உபசெயலாளர் வேலாயுதம் புவிதாசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மூன்று தரங்களிலும் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டோருக்குப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)