
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவர் கேதீஸ்வரனுக்கு யாழ். நீரிழிவு கழகம் கௌரவம்
மணிவிழா கண்ட யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரனை யாழ். நீரிழிவு கழகத்தினர் இன்று (08) புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனர்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை மருத்துவர் ஆ. கேதீஸ்வரனின் பணிமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். நீரிழிவு கழக போசகரும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதியுமான பேராசிரியர் இ. சுரேந்திரகுமரனால் கேதீஸ்வரன் பொனாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து, யாழ். நீரிழிவு சிகிச்சை நிலைய சிறப்பு மருத்துவ நிபுணர் ம. அரவிந்தன், மருத்துவர் பரமேஸ்வரன், நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல் மற்றும் நீரிழிவு கழக அங்கத்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை வழங்கினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)