
posted 6th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரசித்திபெற்ற திருக்கேதீச்சர ஆலய கொடிச்சீலைக்கு காளாஞ்சி வழங்கல்
வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் கொடிச்சீலை காளாஞ்சி வழங்கல் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரியமாக கொடிச்சீலையை வடிவமைப்பவர்களான திருநெல்வேலி, கென்னடி வீதியிலுள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் காளாஞ்சி கையளிக்கப்பட்டது. அத்துடன், பெருந்திருவிழாவுக்கான விஞ்ஞாபனமும் கையளிக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)