
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பல்வேறு குற்றங்களில் தொடர்புள்ள பலர் கைது
குற்றச்செயல்கள், போதை பொருள் விற்பனை - பாவனை போன்றவற்றுடன் தொடர்புடைய 67 பேர் கடந்த ஒரு வார காலத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டனர் என்று காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.
திருட்டு சம்பவங்கள், கசிப்பு விற்பனை, கசிப்பு உற்பத்தி, சட்ட விரோத சாராயம் விற்பனை, ஐஸ் போதை பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
ஏற்கனவே பிணை வழங்கப்பட்டவர்கள் மற்றும் விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர்.
சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)