
posted 17th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நவீன விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்த அமைச்சர்
நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந் நவீன விவசாய விரிவாக்கல் முறையினைப் பார்வையிட்ட அமைச்சர் மிளகாய்ச் செய்கையாளருடனும் கலந்துரையாடினார்.
அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
ஜனாதிபதியினால் நாடுபூராகவும் நவீன விவசாயத்திற்காக 100 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசமும், கிளிநொச்சியில் கண்ணகிபுரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)