
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருநெல்வேலி வர்த்தகருக்கு அபராதம்
யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது உரிய முறையில் வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 18ஆம் திகதி உரிமையாளருக்கு எதிராக யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று முன்தினம் (06) திங்கட்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் வர்த்தக நிலைய உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)