
posted 17th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி வடக்குக்கு 24 ஆம் திகதி விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, கிளிநொச்சி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றையும் திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், வலி வடக்குப் பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)