
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறப்பாக இடம் பெற்ற மந்திகை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல்
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் செவ்வாய்க்கிழமை (28) சிறப்பாக இடம் பெற்றது.
இப் பொங்கல் திருவிழவானது காலை ஆரம்பமானது. இத் திருவிழவாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், தமது நேற்றிக் கடன்களை காவடி, தூக்குக் காவடி, பால் செம்பு, கரகம் என்பவற்றின் மூலம் நிறைவேற்றினர்.
சிறார்களின் கரகாட்டம் பக்தர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இத்திருவிழா நன்கே நடந்தேற மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பருத்தித்துறை போலீஸ் நிலைய அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)