சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி நிர்மாண பணி ஆரம்பம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி நிர்மாண பணி ஆரம்பம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான விடுதிக் கட்டடத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பதில் வைத்திய அத்தியட்சகரும், மகப்பேற்று வைத்திய நிபுணருமான எல்.சி.ஆர். றொஹான் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் என். அகிலன், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.ஏ.எஸ்.எம்.எஸ். ஷாபி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.ஆர். நியாஸ் அஹமட், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவர் டாக்டர் ஏ. இஸ்ஸடீன் உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கன விடுதி வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் முதலாம் மாடிக்கான நிர்மாணப் பணிகளுக்காக தற்போது 15 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி நிர்மாண பணி ஆரம்பம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)