
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு சீருடை
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து பாதுகாப்புச் சீருடைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும், முடிவடையும் நேரத்திலும் வீதிப் போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து வீதியைக் கடக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மாணவர்களுக்கே இச் சீருடைகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)