
posted 7th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடத்தப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டன
நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறியை சனிக்கிழமை (04) மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றி 10 மாடுகளையும் மீட்டனர்.
நெடுந்தீவிலிருந்து மாடுகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மாடுகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் மூலம் படகிலும், அங்கிருந்து லொறி மூலமும் மாடுகளை கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)