ஊழியர் போராட்டத்தை மலினமாக்கும் சக்திகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஊழியர் போராட்டத்தை மலினமாக்கும் சக்திகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்

நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம்.
21 நாட்களாக நாங்கள் போராடிவரும் இவ்வாறான சூழலில் சில பல்கலைக்கழகங்களில் உள்ள மனிதாபிமானமற்ற சிலர் எங்களது நியாயமான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் சூசகமாக சில வேலைத் திட்டங்களை செய்ய முனைகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுகின்றன.

இவ்வாறானவர்கள் எங்களது போராட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின்போதே அவர் இவாறு கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில், பல்கலைக்கழக கட்டமைப்பில் பணியாற்றுபவர்கள் என்ற ரீதியில் கல்விசாரா ஊழியர்களாகிய நாங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்காக குரல் கொடுத்துள்ளோம். இவ்வாறான நிலையில் சிலர் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை நாங்கள் கூட்டாகக் கண்டிக்கின்றோம். இவர்கள் எங்களது கஷ்ட்டங்களை உணர்ந்து எங்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

இன்றைய போராட்டத்தின்போதும் வாக்களிக்கப்பட்ட 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25 வீத எம்.சி.ஏ கொடுப்பனவை வழங்கு என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இங்கு ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பன போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

ஊழியர் போராட்டத்தை மலினமாக்கும் சக்திகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)