
posted 31st May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளர் நடேசனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
இதன்போது, நடேசனின் உருவப் படத்துக்கு ஈகைச் சுடரை மூத்த ஊடகவியாலாளர் சி. தில்லைநாதன் ஏற்றிவைக்க, மலர் மாலையை மகாலிங்கம் அணிவித்தார்.
தொடர்ந்து வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்தவர்கள் மெழுகுதிரி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)