
posted 3rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
உலகில் தமிழ் மொழிக்கு அகராதி கொடுத்த இடம் யாழ்ப்பாணம்
உலகில் தமிழ் மொழிக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைகிறார் என்று உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் இன்று 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
சர்வதேச சிலம்ப போட்டியை முதல்முறையாக 5 நாடுகளின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளமையிட்டு பெருமை அடைகிறேன்.
யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம் இங்கு பேசுகின்ற தமிழ், தூய்மையான, செழுமையான மொழி அதையிட்டு நான் பெருமை அடைகிறேன்.
அவ்வாறான ஓரிடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம்.
இலங்கை சிலம்ப சங்கத்துடன் இணைந்து உலக சிலம்ப சங்கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு (04) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)