
posted 20th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈரான் நாட்டு அதிபர் விபத்தில் உயிரிழந்தார்

ஈரான் நாட்டு அதிபர், இப்றாகிம் றெயிஸி (Ebrahim Raisi), ஈரானியன் எல்லையில் அதிபருடன் சென்ற நான்கு மந்திரிகளுடன் சென்ற உலங்கு வானூர்தி நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) இரவு விபத்திற்குள்ளாகியது. தேடுதல் தொடர்கின்ற வேளையில் இப்போது வரைக்கும் வானூர்தியின் உதிரிப்பாகங்கள் சில கிடைக்கப் பெற்ற நிலையில் எந்தவித உயிர்களின் சான்றுகள் கிடைக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபரின் வானூர்தியானது கோடா அபான் (Khoda Afarin) க்கும் ரபிறிஸி (Tabriz) ற்கும் இடையிலுள்ள அடர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மலைப்பகுதியான உஸி (Uzi) எனும் இடத்தில் விபத்திற்குள்ளாகியது.
துருக்கி, றஷ்யா நாடிகளின் றோனின் உதவிகளுடன் தேடுதல் வேலைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து மீட்புக் குழுக்கள் கடும் குளிர் காலநிலை இருந்தும் மீட்புப் பணியினைத் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மக்கள் அதிபர் மீண்டும் சுகத்துடன் வரவேணுடுமெனப் பிரார்தினைகளில் ஈடுபட்ட வண்ணமாக உள்ளனர்.
எனினும் உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்து அதிபரின் இழப்பிற்கான இரங்கல் செய்திகள் குவிந்தவண்ணமாகவும் உள்ளன.