
posted 21st May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈரானிய தூதுவர் தூதரகத்தில் சந்தித்த ரவூப் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இன்று (21) ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை சந்தித்து, ஹெலிகொப்டர் விபத்தில் காலமான அந் நாட்டு ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரயிசி, அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் உயிரிழந்த தூதுக் குழுவினருக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஹக்கீம் தெரிவித்துக் கொண்டார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)