
posted 26th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிறிக்கட் குழுவினர் கௌரவிப்பு
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் சபையின் தலைவர் வி. அரோஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செறின் தன்னார்வ தொண்டு நிறவனத்தினால் கிழக்கு மாகாண ரீதியில் மகளீர் பிரிவினருக்கென நடத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கு பற்றி மாகாண ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டவர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வெற்றிக் கேடயத்தை பிரதேசசெயலாளரிடம் கையளித்து பெருமையடைந்தனர்.
இதேபோன்று மாவட்ட ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட ஆண்கள் பிரிவினரும் தங்களது வெற்றிக் கோப்பையை கையளித்தனர்.இவர்களது சாதனையை பிரதேச செயலாளர் பாராட்டியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன் பெண்களுக்கான காலணிகளும் வழங்கப்பட்டன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)