
posted 3rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இந்தோனேசியாவில் நீலப் பொருளாதார மாநாடு

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்று வரும் நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார்.
கடல் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் அதே வேளையில் கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதிசெய்ய எம்மைப் போன்ற நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது பற்றியும், இந்தோ- பசிபிக் பகுதியில் கடல்சார் இணைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன, இவற்றை எப்படி எதிர்கொள்ளலாம்? மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள், நீல பொருளாதாரத்தில் முதலீட்டைக் கொண்டு வர, பரந்த கூட்டாளர்களுடன் மூலோபாய கூட்டாண்மைகளை எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றியதாக இந்த செயலமர்வு மாநாடு இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஓர் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது எமது நாட்டில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான இழுவைப்படகு மற்றும் சட்டவிரோத மீன்பிடி பெரிய வர்த்தகர்களின் மீன்படி ரீதியிலான சுரண்டல்கள், வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆழ் கடல்களில் தங்களது பிளாஸ்டிக் மற்றும் இரசாயன கழுவுகளை கொட்டுவதினால் அவை கரை ஒதுங்குவதினால் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றை சுத்தப்படுத்த இவ்வாறான நாடுகள் தங்களது நிதிப் பங்களிப்பை செய்ய வேண்டும் எனவும், எண்ணைக் கப்பல்கள் மற்றும் கொள்கலன்கள் ஏற்றிய கப்பல்கள் இயந்திர கோளாறு காரணமாக கரை ஒதுங்கியதக்கான தாக்கங்களை எம் மீனவர்கள் பல தசாப்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து வெளியிட்டார்.
நீலப் பொருளாதாரம்: நீடித்த பயன்பாட்டுக்கு சுரண்டல். நீலப் பொருளாதாரம் என்பது கடல் மற்றும் கடற்கரைகள் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளைக் குறிக்கும் அதே வேளையில், அதில் நிலத் தன்மையின் ஒரு கூறு இருப்பதாக பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே ஐரோப்பிய ஆணையம் அதை கடல்கள் கடல்கள் மற்றும் கடற்கரைகள் தொடர்பான அனைத்து பொருளாதார நடவடிக்கைகளாக வரையறுக்கிறது.
எதிர்கால நீலப் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்தோ- பசிபிக் வளர்ச்சி மையங்கள் முக்கியமானதாக இருக்கின்றது. இருப்பினும், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் கடல் மாசுபாடு, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற சவால்கள், நிலையான கடல் வள மேலாண்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
கூடுதலாக, பாதிக்கப்படக்கூடிய கடலோர மக்கள் மற்றும் கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை கட்டமைத்தல் , ஒழுங்குபடுத்துதல் மற்றும் கலாச்சார சேவைகளுக்கு ஏற்றவாறு நிர்வகித்தல், தொழில்நுட்பம், நிலையான மீன்பிடித்தல், கடல் திட்டமிடல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்புகள் செழிப்பான உலகளாவிய நீலப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)