
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இணுவில் மக்லியோட் வைத்தியசாலைக்கு சர்வதேச விருது
கருவள சிகிச்சையை சிறந்த முறையில் இலங்கையில் முன்னெடுக்கும் வைத்தியசாலையாக இணுவில் மக்லியோட் வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அதற்கு சர்வதேச விருது வழங்கிவைக்கப்படுள்ளது.
“BWIO” என்ற அமெரிக்காவினை சேர்ந்த அமைப்பினால் குறித்த விருது வழங்கிவைக்கப்பட்டது. இவ் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கருவள சிகிச்சையினை (IVF) சிறந்த முறையில் முன்னெடுக்கும் வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலை 10 சர்வதேச நாடுகளினால் தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கிவைக்கப்பட்டது. இவ் விருது வழங்கும் விழாவில் சர்வதேச நாடுகளின் பிரநிதிகள், அரசியல் பிராமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த வைத்தியசாலை 126 வருடம் பழமை வாய்ந்த வைத்திய சாலையாக காணப்படுகிறது. தற்பொழுது குறித்த வைத்தியசாலையை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் பா. சயந்தன் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)