
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் புனருத்தாரன விழா
இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் 22வது புனருத்தாரன ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்றையதினம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை மற்றும் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் கனடா திருநெறி தமிழ்மறைக் கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கி வைத்தல், CALSDA ஆங்கில விசேட வகுப்பு மாணவர்களில் விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தல், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், 16 துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கேடயம் வழங்கி வைத்தல், சதுரங்க சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கேடயம் வழங்கி வைத்தல், நூலக அலுவலர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.
திரு .ம. கஜந்தரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உடுவில் பிரதேச செயலர் திரு. பா. ஜெயகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr. கெ. இந்திரமோகன், உடுவில் பிரதேச செயலக சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சர்மிளா மயூரன், இணுவில் தென்மேற்கு கிராம அலுவலர் திரு.ஆ. ரஜீவன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை ஆசிரியர் திரு. தி. ஜெகதீஸ்வரன், ஓய்வு நிலை ஆசிரியர் திரு.சி. சிவசோதிநாதன், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு .சி. சிவகுமார், திரு. சி. ஞானமகேஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்துடன், நிகழ்வில் பெரியவர்கள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)