
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அஷ்ரப் நகர் மாணவர்களுக்கு ரஹ்மத் பவுண்டேசனால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அஷ்ரப் நகர் எனும் குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர்களான எம். அஸ்கான் ஏற்பாட்டிலும் ஏ. அஸீஸ் தலைமையிலும் இந்த நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வின் ஓர் அங்கமாக இப்பகுதி சமுர்த்தி பயனாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன் பொதுமக்கள் தமது தேவைகள் தொடர்பிலான மகஜர்களையும் அவரிடம் கையளித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)