
posted 21st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு மக்கள் போராட்டம்
கிளிநொச்சி, பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (21) முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறத்தப்பட்டது.
போராட்டதத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊடகங்களிற்கு மக்கள் கருத்து தெரிவித்தனர்.
குறித்த வைத்தியர் கடந்த 18.08.2019 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலயைில்,
09.02.2023 அன்று எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து குறித்த வைத்தியசாலையில் பதில் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில், குறித்த வைத்தியரை பொறுப்புக்களுடன் மீண்டும் நியமிக்கக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)