
posted 15th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வைத்திய நிபுணர் Dr. சிவகுமாரன் மரணம்
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிடுகையில்,
யாழ். போதனா (Teaching ) வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
மறைந்த Dr. சிவகுமாரன் அவர்கள் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கியவர்.
மருத்துவபீட மாணவர்களால் "கடவுள்" என செல்லமாக அழைக்கப்பட்டவர். கடமை, ஒழுக்கம், நோயாளி முதன்மையானவர் என பல சீரிய பண்புகளை கற்பித்தவர் - என குறிப்பிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)