
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய சிறப்பு அபிஷேகம்
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நேற்று புதன்கிழமை (10) அதிகாலை மந்திரங்கள் முழங்க சிறப்பாக இடம்பெற்றது.
108 கும்பங்கள் வைக்கப்பட்டு - யாகம் வளர்க்கப்பட்டு இந்த சிறப்பு அபிஷேகம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
வவுனியா வடக்கு - ஒலுமடு - வெடுக்குநாறி மலை ஆதிசிவன் (ஆதிலிங்கேஸ்வரர்) ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பன்னிரு தினங்கள் பூசைகள் இடம்பெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)