வெசாக்கில் கசிப்பு - இருவர் கைது

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வெசாக்கில் கசிப்பு - இருவர் கைது

வெசாக் வாரத்தையொட்டி காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கசிப்பு போத்தல்கள் கைபற்றப்பட்டதுடன், பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம். சியாம் தெரிவித்தார்.

மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் போதைவஸ்த்து ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டர். இதன்போது மதுபானப் போத்தல்கள் மற்றும் கசிப்பு போத்தல்களை கைப்பற்றியதுடன் 39 வயதுடைய பெண் ஒருவரையும், 49 வயதுடைய ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவற்குடா நான்காம் குறுக்குத் தெருவில் வீடொன்றின் வெசாக் விடுமுறை காலத்தில் அதிக பணத்துக்கு விற்பனை செய்வதற்காக குப்பைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த 19 சிறிய சாராய போத்தல்கள் மற்றும் 18 பியர் ரின்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

அதே பகுதியில் மற்றோர் இடத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த 750 மில்லி லீற்றர் கசிப்பு போத்தலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் உப பொலிஸ் பரிசோதகர் எம். இஸ்ஹாக் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயவீர தாஹா சந்திரகாசன் தனோஜன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெசாக்கில் கசிப்பு - இருவர் கைது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)