
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
வாகன விபத்து - இருவர் காயம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் அதே திசையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாகச் சேதமடைந்தது.
அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)