வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாக்குத்தெண்டல் உற்சவம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாக்குத்தெண்டல் உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று (22) திங்கள் அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று இந்த பாக்குத் தெண்டல் உற்சவம் இடம்பெற்றது. பாக்குத் தெண்டலுக்குச் சென்றவர்கள் ஆலயத்தை வந்தடைந்தும் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

பாரம்பரிய தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை அறிவிக்கும் முகமாக ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புகளை கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது இடம்பெறுகின்றது. இந்த உற்சவத்தை அடுத்து 7 ஆம் நாள் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து வந்து உப்பு நீரில் விளக்கேற்றி பொங்கல் உற்சவம் இடம்பெறும்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீத்தம் எடுக்கும் உற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி, எதிர்வரும் திங்கள் கிழமை, இடம்பெறவுள்ளதோடு காட்டாவிநாயகர் ஆலயப் பொங்கல் ஜூன் 4 ஆம் திகதியும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் ஜூன் 5ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாக்குத்தெண்டல் உற்சவம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)