வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் எதிர்க்கும் சிலர்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் எதிர்க்கும் சிலர்

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் இன்று (19) வெள்ளி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியினால் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எனக் குறிபிடப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆறு பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு ஊழல்வாதியை ஜனாதிபதி பதவியை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று காலையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு களமிறக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் எதிர்க்கும் சிலர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)