
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரிக்ரொக் மோகம் கைதான எண்மர்
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்ப தலைவரை தாக்கி - அந்தக் காணொலியை 'ரிக்ரொக்' செயலியில் வெளியிட்ட 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீண்ட நாள் முரண்பாடு காரணமாக 10 நாட்களுக்கு முன்னர் 54 வயது குடும்பஸ்தரை கும்பல் ஒன்று தாக்கியது. இதில், படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் தமது முகங்களை மறைத்து ரிக்ரொக் செயலியில் அந்தக் காணொலியை பதிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனிடையே, தாக்குதல் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிலையில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் 8 பேரை இன்று வெள்ளி (12) கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், கூலிக்கு பணம் பெற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் 8 பேரும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)