
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளை மலையடி கிராமத்தில் மீளமைப்பு
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளை சம்மாந்துறை - மலையடி கிராமத்தில் மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஐ. எம். மன்சூர் தலைமையில்இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளர் ஏ. சீ. சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)