
posted 15th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம்
தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் இன்று (14) ஞாயிறுகிளிநொச்சியை வந்தடைந்தது.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னால், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.
குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் நாளை திங்கள்காலை இரணைமடு ச்தியிலிருந்து ஆரம்பித்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என குறித்த குழுவின் தலைவர் த.ஈசன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
புலனாய்வாளர்க்ள தம்மை பின் தொடர்வதாகவும், ஆயினும் இதுவரை எவ்வித அச்சுறுத்தலும் தமக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த ஊர்தியை வரவேற்கும் வகையில் கிளிநொச்சி இளைஞர்கள் நாம் எனும் அமைப்பு இரணைமடு சந்தியில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)