முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்தக் கஞ்சி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்தக் கஞ்சி

வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்று (09) முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் நேற்று புதன் (10) நடத்தப்பட்டது.

நேற்று (10) காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், யாழ்.பல்கலை மாணவர்களுடன் இணைந்து பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் செயற்பாட்டை மேற்கொண்டனர்.

பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பிடி அரிசி மற்றும் இதர பொருட்களைச் சேகரித்தனர்.
அது மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் சிரட்டை சேகரிக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட சிரட்டைகளில் கஞ்சியைப் பரிமாறுவதற்கு ஏற்ற வகையில் சிரட்டைகளைத் தயார்படுத்துவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கிளிநொச்சி வாழ் தாய்மார்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்தக் கஞ்சி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)