
posted 9th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்

இறுதிப் போரின்போதான தமிழின படுகொலையை நினைவுகூரும்முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நேற்று செவ்வாய் வல்வெட்டித்துறையில் ஆரம்பமானபோது தாயார் ஒருவர் வாங்கி அருந்தும் காட்சி...!

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (09) செவ்வாய் நடைபெற்றது.
தமிழினத்தின் வலிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுப்பிரசுரமும் இதன்போது விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் 15ஆம் திகதி வரை வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் எங்கும் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்று (09) செவ்வாய் காலை ஆரம்பமானது.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று செவ்வாய் மதியம் மருதனார்மடம் சந்தியில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விடயங்களை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)