
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மாணவிகளை கடத்த முற்பட்ட வெள்ளை வேன் மடக்கி பிடிக்கப்பட்டது
மாணவர்களை குறி வைத்து கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்படும் வெள்ளை வாகனம் இரு நபர்களுடன் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் வெள்ளைக்காரன் ஒருவர் இருந்ததாகவும் கடத்தப்பட இருந்த பிள்ளைகள் தெரித்துள்ளனர்.
இச்சம்பவம் தலைமன்னார் கிராமத்தில் சிலுவை நகர் பகுதியில் வியாழக்கிழமை (11) மாலை நான்கு மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருவதாவது;
தலைமன்னார் கிராமத்தில் ஒரு ஒதுங்கிய பகுதியாக திகழும் சிலுவை நகர் பகுதியில் ஒரு வெள்ளை வேனுடன் இன்னொரு கார்போன்ற வாகனமும் வந்ததாகவும், அப்பொழுது அவ் வீதியால் 3 , 4 ஆம் ஆண்டு படிக்கும் இரு மாணவிகள் பிரத்தியேக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த பொழுது வெள்ளை வேனில் வந்தவர்கள் இந்த இரு பிள்ளைகளுக்கும் கென்டோஸ் சொக்கிலேற்றைக் காட்டி கூப்பிட்டதாகவும், இவற்றை வாங்குவதற்கு செல்லாமையால் இப் பிள்ளைகளை துரத்த முற்பட்டபோது உடனே இவ்விரு பிள்ளைகளும் ஓட்டம் பிடித்து ஒரு மறைவான இடத்தில் ஒழிந்ததாகவும்,
இந்தப் பிளளைகளை தேடிச் சென்ற வெள்ளை வேன் காரர்களின் செயல்பாட்டைக் அங்குள்ளவர்கள் கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் தப்பியோட முனைந்துள்ளனர்.
இதேவேளையில் கண்ணால் கண்டவர்களும் ஒழிந்திருந்த பிள்ளைகளின் தகவல்களை அறிந்து இவ்வூர் மக்கள் ஒன்று திரண்டு குறிப்பிட்ட வெள்ளை வேன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் தகவலில்படி ஒரு வெள்ளைக்காரனும் பிடிபட்டிருக்கும் ஒருவரும் தங்களை துரத்தியதாகவும் ஆனால் அந்த வெள்ளைக்காரன் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளைக்காரன் இதனுடன் வந்த மற்றைய வாகனத்தில் தப்பியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படகின்றது.
பிடிக்கப்பட்டுள்ள இந்த வெள்ளை வேன் இனிப்பு பண்டங்கள் விற்கும் வியாபார நோக்குடன் வந்த பானியாகவே காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பிடிக்கப்பட்ட வாகனமும் இரு சந்தேக நபர்களும் தலைமன்னார் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)