
posted 10th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மாணவனைக் காணவில்லை
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வரும் மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் திங்கள் கிழமை (8) மாங்குளம் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வரும் குறிப்பிட்ட மாணவன் ஜெகன் கிறிஸ்ரிராஜ் பெர்னாண்டோ (வயது 16) மூன்று வருடங்களாக மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வருவது வழமை. சம்பவத் தினம் அன்று (8) பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை.
அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் ஒருவரால் காணாமல் போன மாணவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு பின்பு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)