
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் மாவட்ட பிரச்சனைகள் தீர்வுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக காணப்படும் பல்வேறுவிதமான பிரச்சனைகள் தொடர்பாக சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வீ.எஸ். சிவகரன் தலைமையில் சனிக்கிழமை (06) காலை 10.30 மணித் தொடக்கம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளார், தாழ்வுப்பாடு பங்குத் தந்தை அருட்பணி சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆகியோர் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வீ.எஸ். சிவகரன் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்;
எமது மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் காணப்படுகின்றன. இங்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்வதால் எமது பிரச்சனைகளை எவ்வாறு அரசியலுக்கூடாக தீர்த்து வைக்கலாம் என ஆராய்வதற்காக இவ் ஒன்றுகூடல் வழி சமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இக் கூட்டத்தில் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்வதுடன் எந்தவித கட்சி முரண்பாடுகளையோ அல்லது விருப்பு வெறுப்புக்களையோ இங்கு காட்ட வேண்டிய அவசியமாக இருக்கக்கூடாது.
மாறாக எமது மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதிலே எமது உரையாடலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்து கலந்துரையாடல் தொடக்கி வைக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)