மன்னார் திருக்கேதீச்சர மஹோட்சவத் திருவிழாவிற்கான பந்தல்கால் நாட்டப்பட்டது.

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் திருக்கேதீச்சர மஹோட்சவத் திருவிழாவிற்கான பந்தல்கால் நாட்டப்பட்டது.

இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதும், நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலமுமான மன்னார் திருக்கேதீச்சரத் திருக்கோயிலின் மஹோட்சவ திருவிழாவிற்கான முதல் பந்தல் கால் நாட்டும் நிகழ்வு ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் புதன்கிழமை (03) காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் திருக்கேதீச்சர ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

ஆலயத்தின் மஹோட்சவ திருவிழாவானது எதிர்வரும் 24.5 . 2023 தொடக்கம் 2. 6. 2023 வெள்ளி வரை பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது .

இத் திருவிழாவை முன்னிட்டு 23.05.2023 மகோற்சவ ஆரம்பக் கிரியைகள் தொடர்ந்து 24.05.2023 தொடக்கம் 31.05.2023 வரை பகல், மாலை, மற்றும் இரவுத் திருவிழாக்களும், 01.06.2023 வியாழன் திருத்தேர் வீதி உலாத் திரவிழாவும், 02.06.2023 வெள்ளிக் கிழமை தீர்த்தத் திருவிழாவும், இரவு கொடியிறக்கமும்,
இதைத் தொடர்ந்து 03.06.2023 சனிக்கிழமை இரவு மௌனத்திருவிழாவும், 04.06.2023 ஞாயிற்றுக் கிழமை பகல் உருத்திராபிடேகம் பஞ்சமூகார்ச்சனையும், திருமுறையர்ச்சனை இரவு சண்டிகேஸ்வரர் திருவிழாவுடன் இவ்திருவிழா நிறைவு பெறுகின்றது.

இவ்விழாக் காலங்களில் உபயகாரர்களாக திருப்பணிச் சபை திருக்கோணமலை மாவட்ட திருக்கேதீச்சர ஆலயத் திருவிழாச் சபை, யாழ் கோப்பாய் கல்வியற் கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம், மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரி, சுண்ணாகம் இராமநாதன் கல்லூரி, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிகள், திருக்கேதீச்சரம் மகாசிவராத்திரிமட பரிபாலணசபை, சீ. திருநாவக்கரசு குடும்பத்தினர், உரும்பிராய் இந்துக் கல்லூரி, சுண்ணாகம் ஸ்கத்தவரோதயாக் கல்லூரி, சட்டத்தரணி பொ. கணபதிப்பிள்ளை குடும்பத்தினர், உடுப்பிட்டி கரணவாய் வடக்கு மற்றும் சீ. சிவலிங்கம் ஆகியோர் உபயகாரர்களாக திகழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் திருக்கேதீச்சர மஹோட்சவத் திருவிழாவிற்கான பந்தல்கால் நாட்டப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)