
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் வெசாக் தினத்தன்று அன்னதானம்
இன்று (05) வெள்ளிக்கிழமை வெசாக் போயா தினத்தன்று மன்னார் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களால் வெசாக் போயா தான உபசாரம் மன்னார் பொலிஸ் நிலையத்தின் முன்னால் நடாத்தப்பட்டது.
பொலிஸ் நிலைய வீதியால் சென்று வந்தோருக்கு இந்த வெசாக் போயா தான உபசாரம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பிரிவினரால் தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரில் உள்ள ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வினை மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)