
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று (11) காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இனப் படுகொலை இடம்பெற்றவேளை மக்களின் அடிப்படை ஆதாரமாக காணப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்திச் சென்றனர். மன்னார் மாவட்டத்தில் மக்கள் பேராதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்சியாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் முன்பாக மதியம் 12:30 மணிமுதல் கஞ்சி விநியோகம் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)