
posted 22nd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பொது மக்களின் பாவனைக்காக
கல்முனை ஆதார மருத்துவமனையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். சந்திர குப்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மருத்துவமனையின அபிவிருத்தி குழுவினர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
திறந்து வைக்கப்பட்ட நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)