
posted 29th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
பூகற்கரை கலைமகள் முன் பள்ளி விழையாட்டு போட்டி
பருத்தித்துறை தம்பசிட்டி பூகற்கரை கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்றைய முன் தினம் 27.05.2023 மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
கலைமகள் முன்பள்ளி நிர்வாக குழு தலைவர் யோகரத்தினம் சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு தேசிய கொடி, சன சமூக நிலையை கொடி, முன்பள்ளி கொடி என்பன ஏற்றப்பட்டன.
தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
குறித்த விளையாட்டு நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர், யுவதிகள், விருந்தினர்களுக்கும், போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பருத்தித்துறை பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் சுரேஷ் சுதாஜினி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஜே417 கிராம உத்தியோகத்தர் திருமதி கிரிசாந்தன் கௌசல்யா, ஜே 410 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் குமுதினி, ஜெ 410 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சோதிஸ்வரன் மனோ ரூபினி, முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சரவணன் ஜீவராசா, மற்றும் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)