
posted 10th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புதுச்சேரியில் நடனமாடி சாதனைப்படைத்த மீன்பாடும் தேன்நாட்டு நாட்டிய கலைஞர்கள்
தென்னிந்தியாவில் ஒரே நேரத்தில் 2600 க்கு மேற்பட்டோர் உடுக்கையுடன் ஆனந்த தாண்டவம் ஆடும் சாதனை நிகழ்வு இடம்பெற்றதில் மட்டக்களப்பு மீன்பாடும் தேன்நாட்டு நாட்டிய கலைஞர்களும் பங்குபற்றி சாதனை புரிந்துள்ளனர்.
புதுவை மாநில சுற்றுல்லா மற்றும் கலை . பண்பாட்டுத்துறை , இந்திரா காந்தி தேசிய கலை மையம் ஆகியவை இணைந்து நடாத்திய ஆனந்த தாண்டவம் என்ற நிகழ்வு கடந்த 05.05.2023 அன்று வெள்ளிக்கிழமை மாலை தென்னிந்தியாவின் புதுச்சேரி நகரில் கடற்கரை காந்தி திடலில் இடம்பெற்றது
உலகின் பல நாடுகளிலும் இருந்து பங்கேற்ற 2600க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கையில் உடுக்கை அடித்தக் கொண்டு ஆனந்த தாண்டவம் என்ற தலைப்பில் ஒன்பது நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றி இருந்தார்கள்
இந்த சாதனையைப் பதிவு செய்வதற்காக உலக சாதனை புத்தக பிரதிநிதிகளும் அவ்விடத்துக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலக சாதனை நிகழ்வில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பைச் சார்ந்த கலா வித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவின் நித்திய கலாலயா நாட்டிய பள்ளியின் மாணவர்கள் செல்வி. தினேஸ் தக்ஷயா, செல்வி. ஜேம்ஸ் லேயா, செல்வி. இம்மானுவல், நிருஷினி, செல்வி. இம்மானுவல் மிருஷினி, செல்வி.சௌந்தரராஜ குருக்கள் தேஜஸ்வினி, செல்வி. நவாஸ் ஜதுமிதா, செல்வி. பிரதீபன் பிரதாயினி, செல்வி. பிரபாகரன் சரண்யா, செல்வி. தேவானந்த் கார்த்திகா, செல்வி தியாகராஜா அபிராஷினி, செல்வி. கிருபாகரன் கிருஷ்ணவாணி, செல்வி. திவாகரன் சிந்துஜா, செல்வி. அருண்குமார் அனுசாந்தினி, திருமதி பத்மா பொன்னையா ஆகிய 15 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்று உலக சாதனையில் பதிவு செய்துள்ளமை சிறப்பு அம்சமாகும்.
அத்துடன் நித்திய கலாலயா நாட்டிய பள்ளியின் இயக்குனர் கலா வித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் விருது வழங்கி அவ்விடத்தில் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நாட்டிய குழுவினர் திங்கள் கிழமை (08) தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் நித்திய கலாலய மாணவிகளின் மூன்றாவது முறையான கின்னஸ் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)