புதிய வடக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழிகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புதிய வடக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழிகள்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அவற்றுக்குத் தீர்வு பெற்று தர முயல்வேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநராக நேற்று (22) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் அவர் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

என்னை வாழ்த்துவதற்கு வருகை தந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அவற்றுக்கு தீர்வு பெற்று தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தை நான் சரியான முறையில் அணுகி அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சி செய்வேன்.

இதேபோல, அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் மாகாண மக்கள் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிதண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலி ஆறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கின்றார். அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளேன். யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிதண்ணீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கின்றேன். நான்கூட இங்கு வருகின்றபோது குடிதண்ணீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு முக்கியமாகக் கவனம் எடுப்பேன் என்றார்.

புதிய வடக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)