
posted 27th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புதிய ஆளுநரின் வேலைத்திட்டம் கிழக்கில் பெருவெற்றிகரம்
கிழக்கு மாகாண புதிய ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமானின் எண்ணக் கருவிலும், ஆலோசனையிலும் இன்று சனிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்ட “தூய்மையான கடற்கரை” எனும் கடற்கரை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் பெருவெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மாகாண மட்டத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளால், அவ்வப்பகுதி பிரதேச செயலகங்சகளின் பங்களிப்புடன் சிறப்புற முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரைகளை சுத்தப்படுத்தும் இந்த பாரிய சிரமதான வேலைத்திட்டத்தில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளின் நிருவாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பெரும்பங்களிப்புடன் வெற்றிகரமாகவும், பெரும் பயனளிப்பதாகவும் இந்த வேலைத்திட்டம் அமைந்தமை குறிப்பித்தக்கது. மேலும், குறித்த புதிய ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவான கடற்கரையினை சுத்தப்படுத்தல் வேலைத்திட்டத்தில், பிரதேச ரீதியான பொது அமைப்புக்கள் சமுர்த்திப் பிரிவினர் பயனாளிகள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பெபாது மக்களும் பெரும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் கிழக்கு மாகாண மட்டத்திலான மேற்படி முதலாவது வேலைத்திட்ம் பெரு வெற்றிகரமாக அமைந்தமை குறித்து பெரு மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் முக்கிய பிரதேச சபையான நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டிலும், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பங்களிப்புடனும் தூய்மையான கடற்கரை வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் திருமதி. ரி. பரமேஸ்வரன் தலைமையில் நிந்தவூர் கடற்கரைப் பூங்கா முன்றலில் இடம்பெற்ற மேற்படி கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். பைஸால் காசிம், பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ. அன்வர் ஆகியோர் அதிதிகளாக்க கலந்து கொண்டதுடன், வேலைத்திட்ட சிரமதானப் பணிகளை ஆரம்பித்துவைத்து, சிரமதானத்திலும் பங்கு கொண்டனர்.
பெருமளவானோர் இத்திட்டம் வெற்றிகரமாக அமையப் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)