
posted 21st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் ஆலயம் அபிஷேகம் செய்து திறந்து வைப்பு
மன்னார் மறைமாவட்டத்தில் நானாட்டான் பங்கின் பள்ளங்கோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் சனிக்கிழமை (20) மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் இப் புதிய அலயம் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட குருமுதல்வர், பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஆலய சபை நிர்வாகத்தினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி ஆயரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் ஆலயத்துக்கான அடிக்கல் கடந்த 2018ம் ஆண்டு நாட்டப்பட்ட நிலையிலேயே இவ் ஆலயம் திறக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)