
posted 30th May 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
பரிதாபமாகக் கொல்லப்பட்ட இளைஞர்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை லொறி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நகரின் காங்கேசன்துறை வீதியில் முட்டாசு கடைச் சந்திக்கு அண்மையாக நேற்று (29) திங்கள்முற்பகல் 11. 45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், தென்மராட்சி - மீசாலையை சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
இந்த விபத்துக் குறித்து மேலும் அறிய வருவதாவது,
பணி ஒன்றுக்காக நிறுவனம் ஒன்றுக்கு நேர்முக தேர்வுகாக இளைஞர் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவரை பின்னால் வந்த லொறி முந்திச் சென்றது. அப்போது, இளைஞரை அது மோதித் தள்ளியது. தடுமாறி கீழே விழுந்த இளைஞரின்மீது லொறியின் பின் சில்லு ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)