
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையிலும், வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.
இந்த பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அதிதிகளாக களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)