
posted 2nd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
பண்டைய காலம் என்றால் என்ன?
பண்டைய காலம் தொட்டு, பண்டைய காலத்திலிருந்து..என்று சாதாரமாக எல்லாரும் அவிட்டு விடுவது வழமையாகி விட்டது. இப்போது கூட பண்டைய காலம் தொட்டு இந்தக் கோவிலில் ஒருகுறிப்பிட்ட மக்களால் திருவிழா நடக்கின்றது என்பதும், பண்டைய காலம் தொட்டு இறக்குமதி, ஏற்றுமதி மூலம் வாணிபம் செய்து செல்வத்தில் நீந்தி வந்த ஊராக சொல்வதும் வழமைகிவிட்டது.
இப்போது, பண்டைய காலம் என்றால் என்ன? அது வரலாற்றில் எங்கு தொடங்குகின்றது என்று கொஞ்சம் யாராவது சொல்லுங்களன், நாங்களும் தெரிந்து கொள்ளலாமல்லாவா, பிளீஸ்.
பண்டைய காலம் என்பது உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்தா? அல்லது கி.முன்னா அல்லது கி.பின்னா? அல்லது சேர, சோழ, பாண்டியர் காலத்திருந்தா? எனக்கு சரியான கொண்வியூசனாக இருக்கிறது. தலைமுடியைப் பிய்க்கணும் போல இருக்கு - ஆனால் எனக்குத்தான் அது இல்லையே!, சொறி.
இந்தக் கோயில் விவகாரத்தை எடுப்போம். இந்தக் கோவில் கட்டிய காலத்திலிருந்து என்று சொன்னால் ஒரு நியாயம். பண்டைய காலத்திலிருந்து என்றால் இது ரொம்ப ஓவராக இருக்கிறதுதானே!
இல்லை நீங்கள் சொல்வது பண்டைய காலத்திலிருந்து என்றால் எப்போதிலிருந்து என்று ஆண்டு, மாதம், திகதியைச் சொல்லுங்களேன், பிளீஸ்.
பண்டைய காலத்திலே இறக்குமதி, ஏற்றுமதி மூலம் செல்வம் கொழித்தது நமது ஊர் என்றால் கேட்கவே வெகு ஆனந்தமாகத்தான் இருக்கிறது. றொம்ப றொம்பப் பெருமையாகவும் இருக்கின்றது. அப்போது நம் முன்னோர்கள் பெரிய செல்வந்தரா? சொல்லுங்களேன் - சரியாக வரையறுத்துச் சொன்னால் வளரும் எம் சமூகம் இன்னமும் உற்சாகமாக விருட்சமாகத் தளிர்க்கும்தானே.
உங்களுடைய கருத்துக்களை எமது இணையத்தளத்து மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.